Skip to main content
Srishti-2022   >>  Poem - Tamil   >>  ஆழியும் அவளும்

Karthik R

UST Global

ஆழியும் அவளும்

நேற்று இரவு துயில விழி சம்மதிக்கவில்லை ....

அதிகாலை ஐந்து மணி வரை இந்த போராட்டம் ,

வீட்டில் இருந்து.....

முப்பது நிமிட தொலைவு தான் 

மெரினா !!!!

 

சட்டேன்று

பேருந்தில் புறப்பட்டேன்

அதிகாலை பயணம் என்பதால்

என் அக்குள் கூட வியர்கவில்லை  

 

பேருந்து நின்றது...

கடற்கரை மணலில் இறங்கி நடந்தேன்

 

அடிகடி பார்க்கும் மனைவியை 

அதிகாலை பார்ப்பது தனி அழகு...

அது போலதான்

பல முறை பார்த்த கடல்

இன்று அதிகால ை பார்த்தது ..

என்னவோ புதுவுணர்வு ......

 

பரந்த கடலின் அலை பார்த்ததும்

அஞ்சி

சுனாமி வருமோ என நினைத்தேன்

வந்ததோ சூரியன் ....

 

உறக்கத்தில் நான் கலைத்த

என்னவளின் நெற்றி பொட்டென

மேகத்தில் கலைந்த செந்தூரமாய்   

சூரியன்..

 

சரிந்த அவளின் கற்றை கூந்தல்

என்னை வருடுவது போல்

என்னை உரசி சென்றது அந்த  வங்காள காற்று ....

 

அவளின்......

உலராத எச்சில் முத்தம் போலவே

அடிகடி.....

என் அங்கம் நனைத்தது நுரை உடுத்திய அலை

 

துயில் கலைந்ததும்.....

என் முகம் பார்த்து பளிச்சிடும்

அவள்  புன்னகை போலவே

சூரியனை  பார்த்த

கடல் - திரவ தங்கமாய் தவழ்ந்தது !!! 

 

ஆசையாய் அணைத்து பிடிப்பேன் !

வெட்கி சிரித்து...

என் பிடியை தளர்த்தி ஓடும் - அவளின்

சேலை மட்டும் தான் மிஞ்சும் என் கையில்

 

அடி கடலே .....

 

உன்னை தீண்டினாலும்

உன் ஆடை நுரையை  என் கரம் விட்டு செல்கிறாயே !!!!

 

நேற்று முதலிரவு முடித்த

புது மாப்பிளையாய்

என் அகத்திலும் முகத்தில் ஒரு வெக்க கிளர்ச்சி -இன்று அதிகாலை

 

நிலம்...

நீர்....

காற்று...

வானம்..

நெருப்பு.....

இவற்றின் நேர்காணலாய்   விளங்கியது அந்த  கடற்கரை காட்சி

 

என் ஐம்புலனும் மெய்மறக்க...

உயிர் குடிக்கும்

அவள் கொடுக்கும்  இதழ் முத்தமே சாட்சி 

 

வீடு திரும்புகையில் .

ஏக்கம் தன்னை விட்டு வந்தேன்

எழில் சொர்க்கம் கொஞ்சம் தொட்டு வந்தேன்