Skip to main content

காலைநேரம், இன்றயநிகழ்வுகளைகாணும்ஆவலோடு பரபரப்பான அந்த சாலையின்ஓரத்தில்  நடந்துகொண்டிருந்தேன். எவ்வளவு தூரம்நடந்தேனோ தெரியவில்லைகளைத்துபோனேன். சற்றுஓய்வுஎடுக்கஒருமரநிழலில் அமர்ந்து  நகரத்தின்அழகைரசித்தேன். 

களைப்பால் கண்ணயர்ந்த நான் விழித்துப் பார்த்தபோதுஅருகில் ஒருவர் என்னையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார்மொட்டை அடித்து பார்ப்பதற்கு ஒரு பிச்சக்காரனைப்போல் தோற்றம்சிறிது நேரம் என்னை பார்த்த அவர் கேட்டார் " என்னஎன்னமாதிரியே ஊர சுத்தி பார்க்க வந்தியாபதிலேதும் சொல்லாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். 

அவர்மீண்டும்எதோசொல்லமுயற்சிக்க, திடிரெனபின்னால் இருந்துஒருஅலறல்சத்தம். அதுஒருபெண்ணின்குரல். தன்னுடையகைபையை பறித்துகொண்டுஓடியதிருடனின்பின்னால் "திருடன்திருடன் " என கத்திகொண்டேஓடினாள். சிறிதும்யோசிக்காமல்என்அருகில்இருந்தவர் அவளுடன்சேர்ந்துதிருடனைதுரத்தஆரம்பித்தார். 

ஒன்றும் புரியாமல்நான் அவர்கள் பின்னால் ஓடினேன். சிறிதுநேரத்தில்  அவர்திருடனை துரத்திப்பிடித்தார். இருவரும்புரண்டுபுரண்டுசண்டைபோட்டதை என்னோடுசேர்ந்துஅக்கம்பக்கத்திலிருந்துபலரும்வேடிக்கைபார்த்தனர். அவரின்  முரட்டுதாக்குதலைசமாளிக்கமுடியாத  திருடன்கைப்பையைகீழேபோட்டுவிட்டு  தப்பிஓடினான். கைப்பையைஎடுத்துஅதைபத்திரமாகஅந்தபெண்ணிடம்  கொடுத்தார். கண்ணீருடன்அதைபெற்றுக்கொண்டஅந்தபெண்அவருக்குநன்றிசொல்லிவிடைவாங்கினார். 

தலையில்ரத்தம்கசிந்துகொண்டிருந்தது, அதைதுடைத்துவிட்டுஅவர்அருகில்  இருந்தகுழாயில்தண்ணீர்அருந்தினார். ரத்தம்சிறிதாய்நிற்கத்துவங்கியது. பின்னர்சிறிதுநேரம்அவர்நடக்கஅவர்பின்னல்நானும்நடந்தேன். இருவரும்ஒருகான்கிரீட்இருக்கையில்அமர்ந்தோம். எங்கள் அருகில் கைபேசியில்  பேசிக்கொண்டிருந்த  ஒருகல்லூரி மாணவன்  அவரைபார்த்தவுடன்  மெதுவாக  நகர்ந்துசாலையை   கடக்கமுயன்றான். ஆச்சரியத்தில் நாங்கள்  அந்தமாணவனைபார்த்தோம். ஏன்  எங்களைப்பார்த்ததும்  எழுந்தான் என்று யோசிப்பதற்குள்ஒருகார்மாணவன்மேல்  மோதிஅவன்தூக்கிவீசப்பட்டான். கார்நிறுத்தாமல்பறந்தது. ஒருநொடியில்மாணவனின்வெள்ளைஆடைசிகப்பாய்மாறியது. சாலையில்இரத்தம்கோலமிட்டது. 

இரத்தவெள்ளத்தில்மிதந்தஅவனைகாணகூட்டம்அலைமோதியது .  சிலர்புகைப்படம்எடுக்க , வேறுசிலர்நேரலையில்சமூகவலைத்தளத்தினுள்  பதிவிட்டுக்கொண்டிருந்தனர். இன்னும்சிலர்அவனுக்காகபரிதாபப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர் . யாரும்அவனைமருத்துவமனைகொண்டுசெல்லும் எண்ணத்திலில்லை . இந்தகாட்சியைபார்த்தநாங்கள்ஆச்சர்யப்பட்டோம். என்னமனிதர்கள்இவர்கள் !!! 

கூட்டத்தைவிலக்கியஅவர்அவனைசுமந்துஒருஆட்டோவில்  ஏற்றி மருத்துவமனைக்குகொண்டுசென்றார். இதைஎல்லாம்பார்த்துசெய்வதறியாமல் நான் கூட்டத்தைபார்த்தேன். நேரலையைமுடித்துகொண்டுகூட்டம்கலைந்தது.  சாலையில்நானும்ரத்தமும். என்னால்ஒன்றும்  செய்யமுடையவில்லையே  என்றகவலையில்நான்அவர்வருகைக்காக காத்திருந்தேன்.    

ரத்தம்காய்ந்தது, சூரியன்அஸ்தமிக்கும்நேரம்நெருங்கியது. அவரை காணவில்லை. என்னஆனதுஎன்று தெரியாமல்  நான்  வேதனையுடன்  நடக்கத்துவங்கினேன். 

அழகானகடற்கரையில்ஒருபக்கம்குழந்தைகள்விளையாடமறுபக்கம்காதல்ஜோடிகள்அலைகளைரசித்தனர் .  

நான்  அவர்களை  ரசித்தேன்.  தூரத்தில்ஒருவர்  கறைபடிந்தசட்டையுடன்  என்னை  பார்த்து  கையசைத்தார்.  நான்பார்த்தஒரேயொருநல்லவர்.  அவரைகண்டநான்  சந்தோஷத்தில்அவர்அருகேசென்றேன். அவர்என்னைபார்த்துஏளனமாய்சிரிக்க, அவர்முகத்தைபார்க்கமுடியாமல்தலைகுனித்தேன் . அதேஏளனச்சிரிப்புடன்அவர்  என்னைபார்த்துசொன்னார் "உன்னைசொல்லி குத்தமில்ல, அவர்களோடு  சேர்ந்து நீயும்இப்படிஆகிட்ட , இங்கேஉயிருக்கும், உணர்வுக்கும், உறவுக்கும் மதிப்பில்லை. மனிதன்இயந்திரமாகிவிட்டான் " . 

அவர்சொல்வதையெல்லாம்கேட்டுக்கொண்டிருந்தஎன்னையாரோசிலர் எட்டி உதைத்தனர். வலியில்கத்தியநான்என்னநடக்கிறது  என்று அறியாமல் அவர்களை பார்த்தேன் . வெள்ளைசீருடையில்வந்தசிலர்அவரைபார்த்து "உன்னஎங்கேல்லாம்தேடுறது, எங்கபொழப்பகெடுக்குறதுக்குன்னேவந்திருக்கபாரு , ஏறுவண்டில"  என்று, அவர்கள்சங்கிலிஇட்டுவண்டிக்குள்இழுத்துதள்ளினர். ஜன்னல்ஓரமாய்   நின்ற   அவர்  என்னை  பார்த்து '  இவர்கள்  எனக்குவைத்திருக்கும்  பெயர்,  பயித்தியக்காரன்!!!. இங்கேநல்லவனாய்வாழ்ந்தால் உனக்கும்  அந்தபெயர் கிடைக்கும்  ஓடிவிடு'  என்றார்.  ஜன்னல்   கதவுமூட , வாகனம்  வேகமாய்   கிளம்பிச்               சென்றது. 

இங்கேஇருப்பதற்கு, பைத்தியமாகவேஇருப்பதுமேல். நானும்அவரைத்துடர்ந்தேன்காரணம்  'நன்றிமறப்பதற்குநான்மனிதனல்ல. நான்  நாய்!!!' 

Author
Linse Antony
Author's Email
bimal.varkala@gmail.com
Author's Phone No
55958
Company
vote
0