Skip to main content
Srishti-2022   >>  Poem - Tamil   >>  பெண் மீன்

Gopalakrishnan

Infosys

பெண் மீன்

சமுத்திரம் எல்லையென சுதந்திரமாய் சில,
சிறியதொரு கிண்ணத்தில் சிறைப்பட்ட சில,
பசிக்கும் ருசிக்கும் பலியான சில,
பண்பை மறந்து பசியாறிய சில,
கண்ணீர் மறைக்க தனிமையில் சில,
கவலை மறந்து கூட்டமாய் சில,
அழகு நிறைந்த சிலையென சில,
அன்பின் உருவாய் அவதரித்த சில,
வேற்றுமைகள் பலவாயினும்
சில ஒற்றுமைகளும் உண்டல்லவா?
மீன்களுக்கும் பெண்களுக்கும்!

Srishti-2022   >>  Poem - Tamil   >>  சாலையோர காட்சி

Kripa K B

EY Kinfra

சாலையோர காட்சி

பெருகிய வயிறுடன் , கிழிந்து தொங்கும் சேலையும்

பர பர தலயும் உளறும் பேச்சும் ,

பசி துடிக்கும் கண்களும் ,

சாலையோரம்  சோலை  தேடிய  என்  கண்களில்  விழுந்த  காட்சி.

 

அறிவுரை  சொல்லும், ஆழ்ந்த சிந்தனையும் இவளுக்கில்லை,

புரிதல்களும் இல்லை , அவளிடம் புரட்சிகளுமில்லை.

பிள்ளை வேண்டாமா என புலம்பும் குடும்பமுமில்லை

குடும்பக்கட்டுப்பாடும் இவளுக்கில்லை.

 

உந்திய வயிறுடன் உருகும் வெயிலில் இவளைகான,  

அனுதாபம் கூறும் சிலர்,

பிள்ளை இவளுக்கெதுக்கு புலம்பும் சிலர்,

அவள் வரண்ட உதடை கண்டு உதடை நனைப்பவரும் சிலர்,

தொலைபேசியில் கண்கட்டி இருப்பதால் கவனிக்காதும் சிலர் .

 

நொடி நேரம் சிலர் சிந்தனையில் வந்த அவளுக்கோ ,

உணவுக்கு என்ன செய்வதென்று ஒரே சிந்தனை

சிகப்பு நிறமோ மறைந்தது , சாலையில் வாகனங்கள் நகர்ந்தது

 நொடிகளும் மறைந்தது , அத்துடன் அவளும்

Srishti-2022   >>  Poem - Tamil   >>  தவழ்ந்து கொண்டிருக்கும்

Prabu Sanakr

UST Global

தவழ்ந்து கொண்டிருக்கும்

தவழ்ந்து கொண்டிருக்கும்

மழலையின் புன்முறுவல்,
சுழன்று கொண்டிருக்கும்
கடிகார நொடிமுள்,
நகர்ந்து கொண்டிருக்கும்
நண்பனின் மறைவு,
கடந்து கொண்டிருக்கும்
காதலின் வலி,
இகழ்ந்து கொண்டிருக்கும்
இட்டானின் துரோகம்,
சகித்து கொண்டிருக்கும்
சகியின் துன்பம்,
மறந்து கொண்டிருக்கும்
மங்கையின் மையல்,

இதற்கு இடையில்

முன்னேற துடிக்கும்
ஏழ்மையின் கட்டாயம்,
உந்தி தள்ளும்
தந்தையின் தைரியம்,
அரவணைக்கும்
அன்னையின் அன்பு,
தட்டி கொடுக்கும்
சகோதரரின்
தன்னம்பிக்கை,
புத்துணர்ச்சி கொடுக்கும்
சகோதரியின்
புன்னகை,
எப்பொழுதும் உடனிருக்கும்
நண்பர்களின் நட்பு,

இத்தனை உணர்வுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் கட்டாயத்தினால்!!!

Srishti-2022   >>  Poem - Tamil   >>  வேனிற்கால காயங்கள்

Gughan Govindasamy

Infosys

வேனிற்கால காயங்கள்

ஊடல் மிஞ்சும்

உறக்கங்கள் அஞ்சும்

நடுங்கும் இரவுகள்

யுகமாய் நகருதே

சுகமாய் எரியுதே..

 

வேனில் மாலை

வீணாகும் வேளை

நீயென் அருகிலே

கனவாய் விழியிலே

கனமாய் விழுந்ததேன்..

 

வேரெல்லாம் விஷமாக

என் காதல் பூக்கள் பறித்து

நீ போனாய்..

தரையெல்லாம் தேளாக

என் நெஞ்சின் சிறகை முறித்து

நீ போனாய்..

 

பருகி இரசித்த இதழ்கள் தவிக்கும்

எந்த முத்தம் இனிக்கும் இனி தேனாய்

இறுகி வெடித்த காதல் தேடி

என் நாட்கள் போகும் வீணாய்...

 

நில் என்று நீண்டு ஒலித்த

என் மௌனத்தின் இரைச்சலை 

கேட்கவில்லையோ நீ

செல் என்று சொன்ன பிறகும்

நீ திரும்பிட விரும்பிய

காயம் நியாயமோடி?

Srishti-2022   >>  Poem - Tamil   >>  Maganey O Maganey (மகனே ஓ மகனே)

Siva Praboth M S

SunTec Business Solutions

Maganey O Maganey (மகனே ஓ மகனே)

மகனே ஓ மகனே !!


என் கண்கள் இருளுதடா, 
இதயம் துடிக்க மறக்குதடா,
நீ இல்ல நிமிடம் கூட, 
வாழ்க்கை வாழ  மறுக்குதடா. 

உன் வழியில் குழி தோண்டி,
நம் வாழ்க்கைப் பள்ளம் ஆனதடா,
அகழ்வாரைத் தாங்கும் நிலம்,
அவர் மகனைத் தாங்காததேனடா ?
 
காற்றில்லா ஆழ்துளைக்குள்ளே,  
கதிரில்லா சிறு வழிக்குள்ளே, 
இருள் பொறுத்த , வலி பொறுத்த,
பசி பொறுத்து, மூச்சடக்கி உயிர் புடிச்ச;  

உனக்காக வரம் கேட்டேன்,
உயிர்ப் பிச்ச தரக் கேட்டேன்; 
ஆண்டவன் கை விட்டான்,
நாட்டை-ஆண்டவனும் கை  விட்டான். 

பசியெடுத்து வாடையிலே, 
கூறிருட்டு மூடயில,   
நினைவிழந்து  போகையில, 
என பத்தி என்ன நெனச்ச ?

இரண்டகம் செஞ்சவனு வஞ்சினியா? 
நம்பிக்கைத் துரோகினு வஞ்சினியா?
கண்டிப்பா வருவானு நம்புனியா !
அரவணைக்க மாட்டாளானு வெதும்பினியா !  

பால் கொடுத்த மார் எனக்கு,
பாரமாகிப் போனதையா !!
நீ படுத்த அடி வயிறோ, 
அனலாய்  எரிக்குதய்யா !!

புகழ்பெற்று நீ விளங்க, 
மனசார ஆசைப்பட்டேன்; 
ஊரெல்லாம் வாசகமாய், 
உன் மரணச் சேதி பரவுதய்யா. 

அம்மானு என்னை அழைக்க,
ஓடி வந்து அரவணைக்க ,
என் கண்ணின் நீர் துடைக்க,
உறவொன்னு கெடச்சிருமோ !!

எரிதணலில் வெந்தாலும்,
உன் நினைவுகள் அழிஞ்சிருமோ?
நினைவுகளோடு  வாழ்ந்தால், 
நாட்கள் நகர்ந்திடுமோ?
மகனே ஓ மகனே!!

Srishti-2022   >>  Poem - Tamil   >>  ஹைக்கூ - ஈர்ப்புவிசை, தென்றல்

Renuka R V

UST Global

ஹைக்கூ - ஈர்ப்புவிசை, தென்றல்

ஈர்ப்புவிசை:

ஈர்ப்புவிசை எதற்க்கு அதிகம் ?

மௌனத்திற்கா?!

வார்த்தைகளுக்கா?!

கண்களுக்கா?!

மௌனமான வார்த்தைகளை பேசும் கண்களுக்குத்தான்!!!

 

தென்றல்:

ஒரு நிமிட தென்றலுக்கே அசையாமல் சிலை போல் நின்றுவிட்டேன் மெய்மறந்து

இப்போது தான் புரிகிறது , மரம் ஏன் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை என்று!!!

Srishti-2022   >>  Poem - Tamil   >>  களவி

Kripa KB

Allianz

களவி

களவி என்று  சொன்னாரா ,

அய்யயோ  நீ  காதை பொத்திக்கொள்,

 

கிழவி  ஆனா  போதிலும்  நீ  களவி  கூறினால் ,

கூடி  தளர்ந்து  பேசுவதை  மறந்துகொள் .

 

 மெய்யும் கலந்தது களவி என   உரைக்காமல்,

 மெய் மட்டுமே களவி  என்பதை  தெரிந்துகொள்.

 

 களவி  என  ஒரு  முறை  சொல்ல  வெக்கப்பட்டு ,                                                  

 ஆனால் ஆயிரம் முறை கலந்தது பெருமைகொள் 

 

கண்ணில் துடங்கி, இதழில்  இறங்கி , கழுத்தில்  சென்றால்  களவி  என சொன்னாரா,

கண்ணில் துடங்கி , இதழில்  இறங்கி , கழுத்தும்  கடந்து  , நெற்றியில் முடிவதும்  களவிதான். 

 

மெய்யின் ஆட்டம் மட்டுமே   களவி யென தெரிந்துகொள்,

 ஆனாலோ மனமோ மிதக்கவேண்டும் தெரிந்துகொள்                                                  

 

களவி பேசினால், கருப்பு மறையுமென்ன கருத்து சொன்னாரா கேட்டுக்கொள் ,

 நெருப்பு நீ என நினைத்தாளோ, நொறுங்கி  விடுவாய்  புரிந்துகொள் 

 

களவி கற்க   காதலி என சொன்னாரா 

  நீ  கலந்தபின் கரம் நீட்டாமல் இருந்தால் கருகி விடுவாள் புரிந்துகொள் 

 

கோரிக்கைகள்  குறிக்க களவி என சொன்னாரா  நீ  தெரிந்துகொள் 

கோர்காத மனமோடு கலந்தால் அதற்க்கு  பெயர்  வேறு புரிந்துகொள் 

 

கல்யாணத்துக்கு   முன்   களவி   

கல்யாணத்துக்கு  பின்   களவி   என்ன  பிரித்தாரா தெரிந்துகொள்

காதலுடன்  கூடினால்  காலமில்லை  புரிந்துகொள்

Srishti-2022   >>  Poem - Tamil   >>  அவளும் மழையும்

Gughan A G

Infosys

அவளும் மழையும்

பொழியும் கனவாய் 

கழியும் இரவில் 

அழியும் என் ஏகாந்தம் 

வழியும் அவள் வாசனையில் ..

அவளும் மழையும் 

நனையும் மனம் குழந்தைப் போல..

அவளும் மழையும்

விரியும் விழி  குடையைப் போல..

அவளும் மழையும் - என்னில்  

காதல் பொழியும்...

 

நிகழாத தீண்டல்களின் 

அகலாத வேதனையாய் 

சிலநேர நெருக்கத்தின் 

சிதையாத வாசனையாய்

அவளும் மழையும் - தினம் 

கவிதை புனையும்..

 

நெற்றிவிழும் முதல்முத்தம்

தொற்றிவிடும் ஓர்பிணியாய்

சுற்றிஎழும் மகரந்தம்

பற்றிவிடும் காரணியாய்

அவளும் மழையும் - மனம் 

காதல் பிணையம்.. 

 

(அவளும் மழையும்...)

 

அவள் ஊடல்கொண்டாட

நான் வெப்பத்தில் காய்ந்திடவோ..

உடலெங்கும் பொழிந்தால்

நான் வெட்கத்தில் சாய்ந்திடவோ..

அவளும் மழையும் - இடை  

தூரம் துயரம்..

 

குற்றமடி ஒளிந்திருத்தல்

கொட்டி விடு பேரலையாய் 

முற்றுமடி என்ஜென்மம்

முத்தமிடு சீரலையாய்..

அவளும் மழையும் - குடை 

இருந்தும் நனையும் ...

 

(அவளும் மழையும்..)

Srishti-2022   >>  Poem - Tamil   >>  ஆழியும் அவளும்

Karthik R

UST Global

ஆழியும் அவளும்

நேற்று இரவு துயில விழி சம்மதிக்கவில்லை ....

அதிகாலை ஐந்து மணி வரை இந்த போராட்டம் ,

வீட்டில் இருந்து.....

முப்பது நிமிட தொலைவு தான் 

மெரினா !!!!

 

சட்டேன்று

பேருந்தில் புறப்பட்டேன்

அதிகாலை பயணம் என்பதால்

என் அக்குள் கூட வியர்கவில்லை  

 

பேருந்து நின்றது...

கடற்கரை மணலில் இறங்கி நடந்தேன்

 

அடிகடி பார்க்கும் மனைவியை 

அதிகாலை பார்ப்பது தனி அழகு...

அது போலதான்

பல முறை பார்த்த கடல்

இன்று அதிகால ை பார்த்தது ..

என்னவோ புதுவுணர்வு ......

 

பரந்த கடலின் அலை பார்த்ததும்

அஞ்சி

சுனாமி வருமோ என நினைத்தேன்

வந்ததோ சூரியன் ....

 

உறக்கத்தில் நான் கலைத்த

என்னவளின் நெற்றி பொட்டென

மேகத்தில் கலைந்த செந்தூரமாய்   

சூரியன்..

 

சரிந்த அவளின் கற்றை கூந்தல்

என்னை வருடுவது போல்

என்னை உரசி சென்றது அந்த  வங்காள காற்று ....

 

அவளின்......

உலராத எச்சில் முத்தம் போலவே

அடிகடி.....

என் அங்கம் நனைத்தது நுரை உடுத்திய அலை

 

துயில் கலைந்ததும்.....

என் முகம் பார்த்து பளிச்சிடும்

அவள்  புன்னகை போலவே

சூரியனை  பார்த்த

கடல் - திரவ தங்கமாய் தவழ்ந்தது !!! 

 

ஆசையாய் அணைத்து பிடிப்பேன் !

வெட்கி சிரித்து...

என் பிடியை தளர்த்தி ஓடும் - அவளின்

சேலை மட்டும் தான் மிஞ்சும் என் கையில்

 

அடி கடலே .....

 

உன்னை தீண்டினாலும்

உன் ஆடை நுரையை  என் கரம் விட்டு செல்கிறாயே !!!!

 

நேற்று முதலிரவு முடித்த

புது மாப்பிளையாய்

என் அகத்திலும் முகத்தில் ஒரு வெக்க கிளர்ச்சி -இன்று அதிகாலை

 

நிலம்...

நீர்....

காற்று...

வானம்..

நெருப்பு.....

இவற்றின் நேர்காணலாய்   விளங்கியது அந்த  கடற்கரை காட்சி

 

என் ஐம்புலனும் மெய்மறக்க...

உயிர் குடிக்கும்

அவள் கொடுக்கும்  இதழ் முத்தமே சாட்சி 

 

வீடு திரும்புகையில் .

ஏக்கம் தன்னை விட்டு வந்தேன்

எழில் சொர்க்கம் கொஞ்சம் தொட்டு வந்தேன்

Srishti-2022   >>  Poem - Tamil   >>  கடவுளும் கப்பலும்

Linse antony

UST Global

கடவுளும் கப்பலும்

நாட்டின் சுதந்திரதினம்

பாரதம் மூவண்ணத்தால் ஜொலிக்க

கார்மேகம் புடைசூழ,  இருண்டது கேரளம்

 

சிரித்தான் சிறுவன்

மழை எனது தோழன்

இருளை விலக்க பகலில் வெடித்தான் மத்தாப்பு

தோழன் நனைத்தான் அணைத்தான்

காணாமல் போனது அவன் சிரிப்பு

 

மழை நீர் காலில் பட

தயாரானான் கப்பல் செய்ய

தண்ணீரில் ஒரு கப்பல் பூக்களம்

வெள்ளம் சூழ்ந்தது கப்பல் கவிழ்ந்தது

 

வீட்டில் தனியே அவனும், சூழ்ந்த தண்ணீரும்

தந்தையும் இல்லை தாயும் இல்லை

மிதந்தது இருக்கை, கழுத்தை தொட்ட தண்ணீர்

 

மணித்துளியில் மரணம், கை மட்டும் மேலே

நிற்க துடித்த இதயம்,

கை குலுக்கினார் கடவுள்

உயிர் வந்தது, உறவு தெரிந்தது

 முற்றதில்  கடவுளும் கப்பலும்!!!

Srishti-2022   >>  Poem - Tamil   >>  வாழ்த்து

Sabari Raja

Stabilix Solutions

வாழ்த்து

நிலவின்  ஓளியாகி  பிறந்தவளே . 

மலரின்  வாசம் போல்  மலர்ந்தவளே .

 

உந்தன்  உயிர்  கொடுத்து  என்னை  படைத்தவளே .

நெருப்பின்  சுடராய்  என்னை  காத்தவளே .

 

அழகிய  உந்தன்  சிரிப்பாள்  எனக்கு  அமுதூட்டியவளே .

குயிலின்  இசையால்  என்னை  தாலாட்டியவளே .

 

மலையின்  சாரல்  போல்  என்  உள்ளம் குளிர்வித்தவளே!.

தோழியாய்  எனக்கு  உயிராய்  நின்றவளே ..

 

உன்  ஒவ்வொரு  நொடியும்  எனக்காக    அர்பணித்தவளே .

என்றும்  உன்  மடியில்  நான்  உன்  குழந்தையே .

 

என்னோடு  வாழும்  இறைவன்  நீ  தானே .

என்  அன்னையே  உன்னை  நினைக்காத  நாள்  எந்நாளோ

Srishti-2022   >>  Poem - Tamil   >>  விதவை தாய்

விதவை தாய்

நதியின் ஒரு கரையின் ஓரத்தில்-

குழப்பம் இருள் சூழ ,

தனிமையில் வீற்றிருந்தாள்!

 

சேலை வைத்து மறைத்த உருவமொன்று-

அவள் இடுப்பினில் கணகணக்க,

வாழ்வில் இனியாவது நல்லதொன்று நேருமென்று 

எண்ணியே நெகிழ்ந்திருந்தாள்.

 

"வெறும் கஞ்சிக்கிங்கு வழியில்ல,

கண் சொருக நேரமில்ல...

காட்டுக்குள் மாடு மேய்ப்பவளுக்கு-

இது ஒன்றும் புதிதல்ல! "

 

வெறிச்சோடி நின்றவளை,

மாலை காற்று தழுவி அணைக்க,

சிவந்த கண்களின் நீரை-

வெகு நேரம் ஆரவிட்டாள்.

 

"கையில் அஞ்சு காசு இல்ல,

பிள்ளைக்கு கொடுக்க உணவுமில்ல,

நித்தமும் பசியோடு போரிட்டவளுக்கு - 

கண்ணீருக்கு பஞ்சமென்ன 

அவள் தெய்வமும் தான் மறந்ததென்ன!"

 

தாயின் சோகம் புரிந்தவனாய்,

புன்னகைத்து அவள் மார்போடு அணைத்துக்கொள்ள,

புன்னகை சாயத்தை பூசிக்கொண்டு 

தன்னம்பிக்கையோடு புறப்படுகிறாள்...

 

மறு கரை சேர்ந்தாவது-

பழம் கசப்பு மறையுமென்று 

நினைத்தவளாய் நடைபோடுகிறாள் -

Srishti-2022   >>  Poem - Tamil   >>  முதல் காதல்

முதல் காதல்

உலகின் உன்னதமான சொல் காதல்

உலகின் உன்னதமான உறவு காதல்

நம் மனதை புண்படுத்துவதும் காதல்

நம் மனதை சுத்தப்படுத்துவதும்  காதல்

பூக்கள் மீது வண்டுகள் கொண்ட காதல்

நிலம் மீது மழை கொண்ட காதல்

கடல் மீது காற்று கொண்ட காதல்

இவை அனைத்தும் காதலாக இருக்கலாம் !

ஆனால், இதை விட உன்னத காதல்

ஒரு ஆணும் பெண்ணும் நம் மீது கொண்ட காதல்

சுயநலம் இல்லா காதல்

சுகமாய் அமைந்த காதல்

எல்லை இல்லா காதல்

வாழ்வின் எல்லை வரை உள்ள காதல்

எதிர்ப்பு இல்லா காதல்

எதிர்பார்ப்பு இல்லா காதல்

நம்மை கருவில்  சுமந்த காதல்

நம்மை தோளில் சுமந்து வளர்த்த காதல்

ஆம் !! இது நம் தாய் தந்தை நம் மீது கொண்ட காதல்

வானவில்லாய் தோன்றிய முதல் காதல்

வாழ்க்கையை வண்ணமயமாய் மாற்றிய முதல் காதல்

காலம் சென்றாலும்,

கனவுகள் மறைந்தாலும்,

நம் உயிர் உள்ளவவரை

என்றும் தொடரும் இந்த காதல் !!

Srishti-2022   >>  Poem - Tamil   >>  என் நகல் !!!

Siva Praboth M S

SunTec Business Solutions

என் நகல் !!!

என் உயிரின் நகல், நீதானடி !

உன் கைப்படும் சிறுதுளி, அமுதமடி !

 

உன் நிழல் அழுதாலு ம் நோகுதடி,

என்றும் புன்னகை மட்டும், நீ சூடடி.

 

ஆயிரம் ஜென்மங்கள் வாழ்வோமடி 

என் பகல், நிலா, மழை நீ தானடி !

 

ஆம் என்ற வார்தை ஒன்று, நீ கூறடி, 

என்றும் உன் தந்தை, நான் தானடி !

 

அது-இது வேண்டும் என்று, நீ அடம் பிடி, 

உன்னிடம் மண்டியிட்டு, நான் தோற்பேனடி!

 

கொஞ்சலுடன் அழுகையும், கலந்து தா !

உன் கூந்தலிலே மல்லிகைப் பூச்சூடவா !

 

சல்-சல், சல்-சல் என்று கொலுசுடன் வா !

ஸப்த ஸ்வரங்களுடன், புது விடியல் தா !

 

என் கை பிடித்தே, நீ நடந்திடடி ! 

உன் வழியில் வெளிச்சம், நான் தருவேனடி !

 

நாட்டியம் செய்திடு, பார்வையிலே,

என்னை பைத்தியமாக்கிடு, கொஞ்சலிலே !

 

வீட்டினுள் கோலமிடு, உன் பாதையாலே !

பூக்களை பதித்திடு, உன் ஸ்பரிஸத்திலே !

 

அறுசுவை விருந்துதா ! உன் கையாலே,

என் வீட்டினில் சிற்பம் செய், சேற்றாலே ! 

 

சாரலுடன் தென்றல், உன் சிணுங்கலிலே

தாளத்துடன் நடனம், உன் கோபத்திலே

 

சுவற்றினில் சித்திரம் பல, உன் கிறுக்கலிலே

வீட்டினில் இடம் உண்டு, நிறுத்தாதே !

 

நான் பெற்ற இன்பம் ஒன்றும், போதாதடி !

நீ தரும் போதை இன்னும், வேண்டுமடி ! 

 

நம் நினைவுகள் என்றும், அழியாதடி ! 

உதிராது ஒவ்வொன்றாய் நான், கோர்பேனடி !! 

Srishti-2022   >>  Poem - Tamil   >>  ஹைக்கூ - உன்னை தேடிடுவேன்

Subramaniam Rakkiannan

Infosys

ஹைக்கூ - உன்னை தேடிடுவேன்

சிலையாய் உன்னை செதுக்கிடவே ,

ஊழியாய் நானும் வந்திடுவேன்,

மரணம் என்றொரு நாள் வந்தால்,

உன்னை முதலில் கொன்றிடுவேன்.

நீ இன்றி அங்கு வாழ்வது தகுமோ ,

சொர்க்கத்தில் உன்னை தேடிடுவேன் ....

Subscribe to Poem - Tamil